ரெயில் பயணம்

இன்று மைசூரில் இருந்து திருச்சி- ரயில் பயணம்.

முன் பதிவில்லா பொதுப்பெட்டி.

நான் பார்த்தது பலவகையான மனிதர்கள்.

ஒரு இருக்கைக்காக பல சண்டைகள்,

அந்த சண்டையை சமாதானபடுத்த முயல்பவர்கள்,

வேடிக்கை பார்ப்பவர்கள்,

அதை பார்த்து பயப்படும் குழந்தைகள்.

இடம் பிடிப்பதற்காக பிள்ளையை ஜன்னல் வழியாக உள்ளே எறியும் பெற்றோர்.

இடம் கிடைக்காமல் நடை பாதையிலே அமர்பவர்கள்.

போகும் வழி எல்லாம் கிடைக்கும் தின் பண்டங்களை கேட்கும் குழந்தைகள்.

அதை சாப்பிட்டால் வரும் கேடுகளை ஒரு வைத்தியரை போல் கூறும் சில தெரியாத, பரிச்சியமாகாத நலம் விரும்பிகள்.

பக்கத்து இருக்கையில் இருக்கும் குழந்தைக்கு எதை சாபிட்டாலும் கொடுக்கும் ஒரு அன்பு.

கொண்டு வந்த புளியோதரை, இட்லி மற்றும் இதர தின்பண்டங்களை பகிர்ந்து உண்னும் பழக்கம்.

பழங்கால நிகழ்வுகள், அரசியல், இன்னும் பிற கருதுக்களை, பகிர்ந்து கொள்ளும் பெரியவர்கள்.

செருப்பை தொலைத்து அம்மா திட்டுவார்கள் என்று அமைதியாக தேடும் வாண்டுகள்.

பலநாள் கழித்து நான் கேட்கும் வாசகம் “ அந்த காலத்தில் “. இது ஒரு பெரியவரின் பேச்சின் ஆரம்பம்.

கூட்ட நெரிசலில் மயங்கிய சிறுமி.

குழந்தையின் அழுகுரல்.

தெரியாத ஒன்றையும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்பவர்கள்.

சுய போற்றி பாடுபவர்கள்.

இரவில் குழந்தைக்கு சுவெட்டெர் போட்டு விட உதவும் கரங்கள்.

சிறு நீர் கழிக்க சூப்பர் மேன் ஆகி தரையில் காலை வைக்காமல் சீட்டில் வைத்து செல்பவர்கள்.

பயணிக்கும் பெண் பிள்ளைகளை தன் மாமன் மகளாக பார்க்கும் காளைகள்.

எங்கே பேசினால் உதவி கெட்பார்களோ என்று தூங்குவதை போல் நடிப்பவர்கள்.

கொஞ்சம் கூட வெட்கமும், மனிதமும் இல்லாமல் அனைவரையும் முகம் சுழிக்க்ச் செய்யும் நாய்களும்.

அவசரத்தில் முந்தய ரெயில் நிலையத்திலேயே அரை தூக்கதில் இறங்குபவர்கள்.

சாவியை தொலைதவர்கள்.

ஐந்து வயது குழந்தைக்கு மூன்று வயது என்று கூறி பயணச்சீட்டு வாங்காதவர்கள்.

முன் பின் தெரியாதவரை மாமா என்று அறிமுகப்படுத்தும் அம்மா.

பேத்தி வயதிருக்கும் பெண்னை சைட் அடிக்கும் தாத்தா.

Advertisements

About karthhic

i am a research geek
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s